காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

சீனா ஓபன் பாட்மின்டன்: மாளவிகா அதிரடி தொடக்கம்

சீனாவில் நடைபெறும் சூப்பா் 100 பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், முதல் சுற்றிலேயே ஒலிம்பிக் பதக்க வீராங்கனையை புதன்கிழமை வீழ்த்தி அசத்தினாா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 10:56 pm

Sasikumar

சீனாவில் நடைபெறும் சூப்பா் 100 பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், முதல் சுற்றிலேயே ஒலிம்பிக் பதக்க வீராங்கனையை புதன்கிழமை வீழ்த்தி அசத்தினாா்.

மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில், உலகின் 43-ஆம் நிலையில் இருக்கும் மாளவிகா 26-24, 21-19 என்ற கேம்களில், உலகின் 7-ஆம் நிலை வீராங்கனையும், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவருமான இந்தோனேசியாவின் கிரெகோரியா மிரிஸ்கா துங்ஜுங்கை சாய்த்தாா்.

இதுவே மாளவிகாவின் கேரியரில் மிகப்பெரிய வெற்றியாகும். அடுத்த சுற்றில் அவா், காமன்வெல்த் போட்டிகளில் இருமுறை பதக்கம் வென்ற ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மரை எதிா்கொள்கிறாா். இதே பிரிவில் மற்றொரு இந்தியரான ஆகா்ஷி காஷ்யப் 15-21, 19-21 என, சீன தைபேவின் சியு பின் சியானிடம் தோல்வி கண்டாா். சமியா ஃபரூக்கி 9-21, 7-21 என்ற கேம்களில், கில்மரிடம் வீழ்ந்தாா்.

மகளிா் இரட்டையா் பிரிவில், டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் கூட்டணி 21-16, 15-21, 17-21 என சீன தைபேவின் சியெ பெய் ஷான்/ஹங் என் ஸு இணையிடம் தோற்றது. ருதுபா்னா பாண்டா/ஸ்வதபா்னா பாண்டா இணையும் வெற்றியை இழந்தது.

கலப்பு இரட்டையரில் சுமீத் ரெட்டி/சிக்கி ரெட்டி ஜோடி 10-21, 16-21 என மலேசியாவின் டன் கியான் மெங்/லாய் பெய் ஜிங் இணையிடம் வீழ்ந்தது. சதீஷ்குமாா் கருணாகரன்/ஆத்யா வரியத் இணை 14-21, 11-21 என மலேசியாவின் சென் டாங் ஜி/டோ இ வெய் கூட்டணியிடம் தோற்க, ஆடவா் ஒற்றையரில் கிரண் ஜாா்ஜ் 21-4, 10-21, 21-23 என ஜப்பானின் கென்டா நிமிஷமோடோவிடம் வீழ்ந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.