எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

உலகக் கோப்பை தகுதிச் சுற்று: மெஸ்ஸி, வினிசியஸ் ஜூனியருக்கு அதிர்ச்சி..!

கால்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் மெஸ்ஸி, வினிசியஸ் ஜூனியர் அணிகள் அதிர்ச்சியை சந்தித்தன.

News image
மெஸ்ஸி, வினிசியஸ் ஜூனியர் - படங்கள்: ஏபி
Updated On :15 நவம்பர் 2024, 7:07 am

DIN

2026ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் ஆர்ஜென்டினா அணி பராகுவே அணியுடன் மோதியது.

இந்தப் போட்டியில் 2-1 என பராகுவே அணி வென்றது. இதுவரை நடந்த போட்டிகளில் ஆர்ஜென்டினா 60 முறை வென்று ஆதிக்கம் செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் தோற்றாலும் தென் அமெரிக்கா பிரிவில் ஆர்ஜென்டினா புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்றுமொரு ஆட்டத்தில் பிரேசிலும் வெனிசுலா அணியும் மோதின. இந்தப் போட்டி 1-1 என டிராவில் முடிந்தது. புள்ளிப் பட்டியலில் பிரேசில் 3ஆவது இடத்தில் இருக்கிறது. கொலம்பியா 2ஆம் இடத்தில் இருக்கிறது.

பேலன் தோர் விருது வினிசியஸ் ஜூனியருக்கு கிடைக்காததால் விழாவை ரியல் மாட்ரிட் அணி புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியின் 6 ஆட்டங்களில் விளையாடி ஒரு கோல் கூட அடிக்காதது குறிப்பிட்டத்தக்கது.

லா லீகா தொடரில் ஹாட்ரிக் கோல்கள் அடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.