டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

டி20 உலகக் கோப்பை: 19 வயதில் சதம் விளாசி வரலாறு படைத்த கனடா வீரர்!

19 வயதில் சதம் விளாசி வரலாறு படைத்த கனடா வீரர் பற்றி...

News image
யுவராஜ் சாம்ரா - PTI
Updated On :18 பிப்ரவரி 2026, 7:18 am

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 19 வயதில் சதமடித்து கனடா வீரர் யுவராஜ் சாம்ரா சாதனை படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றன. சென்னை சேப்பாக்கம் திடலில் இன்று நடைபெற்று வரும் குரூப் டி சுற்றில், நியூசிலாந்து - கனடா அணிகள் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற கனடா அணி பேட்டிங்கை தேர்வு செய்து, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை குவித்துள்ளது.

கனடா அணியின் தொடக்க வீரரான 19 வயது யுவராஜ் சாம்ரா சதம் விளாசி அதிரடி காட்டியுள்ளார். 6 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் உள்பட 65 பந்துகளில் 110 ரன்கள் குவித்துள்ளார்.

இதன்மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் மிக இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற சாதனையை யுவராஜ் சாம்ரா படைத்துள்ளார்.

உலகக் கோப்பையில் 22 வயதில் சதமடித்த பாகிஸ்தான் வீரர் அகமது ஷெஹ்சாத்தின் சாதனையை யுவராஜ் சாம்ரா முறியடித்துள்ளார்.

மேலும், உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதிபெறாத நாட்டிலிருந்து (அசோசியேட் நாடு) சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் இளம் வயதில் சதமடித்தவர்கள்

19 வயது 141 நாள்கள் - யுவராஜ் சாம்ரா (கனடா) - எதிரணி நியூசிலாந்து - சென்னை, 2026

22 வயது 127 நாள்கள் - அகமது ஷெஹ்சாத் (பாகிஸ்தான்) - எதிரணி வங்கதேசம், மிர்பூர், 2014

23 வயது 156 நாள்கள் - சுரேஷ் ரெய்னா (இந்தியா) - எதிரணி தென்னாப்பிரிக்கா, க்ரோஸ் ஐலெட், 2010

25 வயது 83 நாள்கள் - அலெக்ஸ் ஹேல்ஸ் (இங்கிலாந்து) - எதிரணி இலங்கை, சட்டோகிராம், 2014

25 வயது 327 நாள்கள் - கிளென் பிலிப்ஸ் (நியூசிலாந்து) - எதிரணி இலங்கை, சிட்னி, 2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.