டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

டி20 உலக கோப்பை: முக்கிய வீரர் விலகல்! இலங்கை அணிக்குப் பின்னடைவு!!

இலங்கை அணியிலிருந்து ஹசரங்கா விலகல்!

News image
ஹசரங்கா- AP Photo
Updated On :10 பிப்ரவரி 2026, 5:11 pm

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலக கோப்பை தொடரில் விளையாடும் இலங்கை அணியிலிருந்து வனிந்து ஹசரங்கா விலகியுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலுக்கு தீனி போட, டி20 உலக கோப்பை தொடரின் 10-ஆவது சீசன் சனிக்கிழமை (பிப். 7) கோலாகலமாகத் தொடங்கியது. மார்ச் 8 வரை நடைபெறும் இந்தத் தொடரில், மொத்தம் 20 அணிகள் குரூப் ஏ முதல் டி வரை ஒரு குரூப்புக்கு தலா 5 அணிகள் வீதம் பிரிக்கப்பட்டு போட்டி நடைபெறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 6-ஆவது ஆட்டத்தில் அயா்லாந்தை எதிர்த்து களம் கண்ட இலங்கை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த நிலையில், அந்த அணியில் நட்சத்திர வீரர் வனிந்து ஹசரங்காவுக்கு அயர்லாந்துக்கெதிரான ஆட்டத்தின்போது உடலில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அதற்கான சிகிச்சையில் இருப்பதால் உலக கோப்பை தொடரிலிருந்து அவர் நீக்கப்பட்டிருப்பதாக இலங்கை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுழற்பந்துவீச்சு ஆல்-ரௌண்டரான வனிந்து ஹசரங்காவுக்குப் பதிலாக மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் துஷன் ஹேமந்தா இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

summary

Wanindu Hasaranga ruled out of T20 World Cup with injury

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.