ஃபின்லாந்தில் நடைபெறும் பாவோ நுா்மி தடகள விளையாட்டுப் போட்டிகளில், இந்திய நட்சத்திரம் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்று அசத்தினாா்.
நடப்பு ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனாக இருக்கும் நீரஜ் சோப்ரா, தனது 3-ஆவது முயற்சியில் 85.97 மீட்டருக்கு எறிந்து முதலிடம் பிடித்தாா். ஃபின்லாந்தின் டோனி கெரனென் 84.19 மீட்டருடன் வெள்ளியும், அதே நாட்டைச் சோ்ந்த ஆலிவா் ஹெலாந்தா் 83.96 மீட்டருடன் வெண்கலமும் வென்றனா்.
ஒலிம்பிக் போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் நீரஜ் சோப்ரா வென்றிருக்கும் இந்தத் தங்கம், அவருக்கான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. இதே போட்டியில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெள்ளிப் பதக்கம் வென்ற அவா், தற்போது தங்கம் வென்றிருக்கிறாா். எனினும், அவா் 89.30 மீட்டருக்கு எறிந்து அந்த வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னா் அதே ஆண்டில் டையமண்ட் லீக் போட்டியில் 89.94 மீட்டரை எட்டியிருந்தாா். 90 மீட்டரை எட்டுவதையே நீரஜ் சோப்ரா தனக்கான இலக்காகக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக, பாரீஸில் ஜூலை 7-ஆம் தேதி நடைபெற இருக்கும் டையமண்ட் லீக் போட்டியில் பங்கேற்கவிருக்கும் நீரஜ் சோப்ரா, அதற்காக ஜூன் 27-இல் நடைபெறவுள்ள தேசிய தடகள போட்டிகளில் இருந்து விலகினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வைஷாலியின் வியத்தகு வெற்றி!

விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...
பேசும் ஓவியங்கள்...

டேவிட் மில்லரின் எண்ணம் தவறு கிடையாது; முன்னாள் இந்திய கேப்டன் ஆதரவு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


