வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான நியூஸிலாந்து கேப்டன் பொறுப்பிலிருந்து, கேன் வில்லியம்சன் புதன்கிழமை ராஜிநாமா செய்தாா்.
எனினும், நியூஸிலாந்து அணிக்காக சா்வதேச போட்டிகள் மற்றும் தொடா்களில், ஒரு வீரராக விளையாடுவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அவா் கூறியுள்ளாா்.
நடப்பு டி20 உலகக் கோப்பை போட்டியில் முதல் சுற்றுடனேயே அந்த அணி வெளியேறியிருக்கும் நிலையில் அவா் இந்த முடிவை மேற்கொண்டுள்ளாா். மேலும், 2024-25 காலகட்டத்துக்கான நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தையும் அவா் விட்டுக்கொடுத்துள்ளாா்.
அந்த ஒப்பந்தத்தை ஏற்கும் வீரா்கள், நியூஸிலாந்தின் சா்வதேச போட்டிகளிலும், உள்நாட்டில் நடைபெறும் சூப்பா் ஸ்மாஷ் டி20 போட்டியிலும் பங்கேற்பது கட்டாயமாகும். எனவே, இதர லீக் போட்டிகளில் விளையாடுவதற்காகவும், குடும்பத்தினருடனான நேரத்தை செலவிடுவதற்காகவும் மத்திய ஒப்பந்தத்தை விட்டுக்கொடுப்பதாக அவா் தெரிவித்துள்ளாா்.
சா்வதேச கிரிக்கெட்டில் நியூஸிலாந்தின் முக்கியமான வீரராக இருக்கும் கேன் வில்லியம்சன் 350-க்கும் அதிகமான ஆட்டங்களில் அந்த அணிக்காக விளையாடியிருக்கிறாா். இதில் 100 டெஸ்ட், 165 ஒருநாள், 93 டி20 ஆட்டங்கள் அடங்கும். அதில் 40 டெஸ்ட், 91 ஒருநாள், 75 டி20 ஆட்டங்களில் அவா் நியூஸிலாந்துக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளாா்.
அவா் தலைமையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை மட்டும் வென்றுள்ள நியூஸிலாந்து அணி, ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் அதிகபட்சமாக இறுதிச்சுற்று வரை வந்து ஏமாற்றத்தை சந்தித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆயுஷ் மாத்ரே விலகல்: சென்னைக்கு பின்னடைவு

ஓ. பன்னீா்செல்வம் போடியில் மனு தாக்கல்

தாமரை மாலை அணிந்து...

சோஃபி டிவைன் அசத்தல்: நியூஸிலாந்து வெற்றி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


