நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

ஆஸ்திரேலியாவை பழித்தீர்க்குமா இந்தியா? 

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் பாகிஸ்தானை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

News image
Updated On :11 பிப்ரவரி 2024, 4:58 pm

DIN


19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் பாகிஸ்தானை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தேர்வான இந்திய அணியுடன் ஆஸி. அணி வருகிற பிப்ரவரி 11 ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) இறுதிப்போட்டியில் மோதவுள்ளது. இந்தப் போட்டியிலாவது இந்திய அணி வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

ஏனெனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023, ஒருநாள் உலகக் கோப்பை 2023இல் இந்திய அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இது இந்திய ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

மூத்த வீரர்கள் சார்பில் இளம் வீரர்கள் ஆஸி. அணியை பழித்தீர்க்க வேண்டுமென ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.