வங்கதேசத்தை 204 ரன்களுக்கு சுருட்டிய பாகிஸ்தான் அரையிறுதியில் நுழையுமா?
உலகக் கோப்பையின் 31வது போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.


உலகக் கோப்பையின் 31வது போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
உலகக் கோப்பையின் 31வது போட்டியில் வங்கதேசம்-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேசம் அணி 45.1 ஓவரில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ்- 45, மஹமதுல்லா- 56, ஷகிப் அல் ஹாஷன்- 43 ரன்கள் எடுத்தார்கள். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.

முகமது வாசிம் ஜுனியர்
பாகிஸ்தான் அணி சார்பாக ஷாஹீன் அஃப்ரிடி, முகமது வாசிம் ஜுனியர் தலா 3 விக்கெட்டுகளும் ஹாரிஸ் ரௌப் 2 விக்கெட்டுகளும் உஸாம மிர், இப்திகார் தலா 1 விக்கும் எடுத்து அசத்தினார்கள்.

205 ரன்கள் என்ற எளிய இலக்குடன் பாகிஸ்தான் விளையாடி வருகிறது. மீதமிருக்கும் (இந்தப்போட்டியோடு சேர்த்து) 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் 10 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற பாகிஸ்தானுக்கு வாய்ப்புள்ளது.
பாகிஸ்தானுக்கு அடுத்தப் போட்டிகள்: நியூசிலாந்து, இங்கிலாந்து.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...