ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தோல்வியில் இருந்து மீளுமா ஆஸி.: இலங்கை முதலில் பேட்டிங்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

News image
படம்: ட்விட்டர் / ஐசிசி
Updated On :2 பிப்ரவரி 2024, 3:09 am

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 14-வது போட்டி லக்னெளவில் இன்று நடைபெறுகிறது. இதில், இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் குசல் மெண்டீஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகாவுக்கு வலது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியதால் குசல் மெண்டீஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நடப்பு தொடரில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் தாங்கள் விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இரு அணிகளும் தோல்வியில் இருந்து மீண்டு, வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் களமிறங்கியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.