மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

மைதானத்தின் மேற்கூரையிலிருந்து தூக்கி வீசப்பட்ட விளம்பரப் பதாகைகள்!

பலத்தக் காற்று வீசியதால் லக்னௌ மைதானத்தின் மேற்கூரையிலிருந்து விளம்பரப் பதாகைகள் தூக்கி வீசப்பட்டு ரசிகர்கள் மீது விழுந்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:09 am

DIN

பலத்தக் காற்று வீசியதால் லக்னௌ மைதானத்தின் மேற்கூரையிலிருந்து விளம்பரப் பதாகைகள் தூக்கி வீசப்பட்டு ரசிகர்கள் மீது விழுந்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. 

உலகக் கோப்பையில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள்  விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 209  ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தப் போட்டியின்போது இடையே மழை குறுக்கிட்டு ஆட்டம் நடைபெறுவதில் சற்று தாமதம் ஏற்பட்டது.

மழை நின்ற பிறகு பலத்தக் காற்று வீசியதால் மைதானத்தின் மேற்கூரையிலிருந்து விளம்பரப் பதாகைகள் ரசிகர்கள் அமர்ந்திருக்கும் இடத்தின் மீது விழுந்தன. இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. விளம்பரப் பலகைகள் விழுந்த இடங்களில் குறைந்த அளவில் ரசிகர்கள் அமர்ந்திருந்தனர். நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால், அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ரசிகர்கள் பாதுகாப்பாக அமரவும் அறிவுறுத்தப்பட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.