சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

இந்தியாவுக்கு பலவீனமே கிடையாது: ஆஸ்திரேலிய வீரர்

இந்திய அணிக்கு உண்மையில் பலவீனம் என்பதே இல்லை என ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:22 am

DIN

இந்திய அணிக்கு உண்மையில் பலவீனம் என்பதே இல்லை என ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியின் வெற்றிக்குப் பிறகு பேசிய அவர் இதனை தெரிவித்தார். 

அப்போது அவர் பேசியதாவது: உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடினோம். அந்தத் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியாவிடம் தோல்வியடைந்தோம். இருப்பினும், இந்தியாவுக்கு எதிராக பலமுறை விளையாடியுள்ளது எங்களுக்கு உதவும். இந்திய அணியைப் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் மிகவும் தரமான அணி. நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் அவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பலவீனம் என்று பெரிதாக எதுவும் இல்லை. அவர்களுக்கு எதிராக இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளதை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என்றார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப்போட்டி நாளை மறுநாள் (நவம்பர் 19) அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.