சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த ஆப்கானிஸ்தான்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் இப்ராஹிம் ஸ்த்ரானின் அசத்தலான சதத்தினால் 5 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் குவித்துள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:18 am

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் இப்ராஹிம் ஸ்த்ரானின் அசத்தலான சதத்தினால் 5 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் குவித்துள்ளது.

உலகக்  கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில்  இன்று நடைபெற்று வரும் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் களமிறங்கினர். இந்த இணை சீரான தொடக்கத்தைத் தந்தது. இருப்பினும், குர்பாஸ் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ரஹ்மத் ஷா நிதானமாக விளையாடினார். இப்ராஹிம் ஸ்த்ரான் அவ்வப்போது பந்தினை பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் ஆப்கானிஸ்தானின் ஸ்கோர் உயர்ந்தது. இருப்பினும், ரஹ்மத் ஷா 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஹஸ்மதுல்லா ஷகிதி (26 ரன்கள்), அஸ்மதுல்லா ஓமர்சாய் (22 ரன்கள்), முகமது நபி (12 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இப்ராஹிம் ஸத்ரான் சதம் விளாசி அசத்தினார். இதன்மூலம் உலகக் கோப்பையில் சதம் விளாசிய முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். ஆட்டத்தின் இறுதியில் ரஷித் கான் தனது பங்குக்கு அதிரடி காட்டினார். அவர் 18 பந்துகளில் 35 ரன்கள் குவித்தார். இப்ராஹிம் ஸத்ரான் 129 ரன்களுடனும் (8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்), ரஷித் கான் 35 ரன்களுடனும் (2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) களத்தில் இருந்தனர்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் எடுத்தது. உலகக் கோப்பை போட்டிகளில் ஆப்கானிஸ்தான் குவித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். முன்னதாக, கடந்த 2019 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 288 ரன்கள் எடுத்ததே உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானின் அதிபட்ச ஸ்கோராக இருந்தது.  ஆஸ்திரேலியா தரப்பில் ஜோஸ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மிட்செல் ஸ்டார்க், கிளன் மேக்ஸ்வெல் மற்றும் ஆடம் ஸாம்பா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். 

292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.