விராட் கோலி ஒரு மிகச் சிறந்த வீரர் எனவும், அவரது தலைமுறை வீரர்களுக்கு அவர் வழிகாட்டியாக இருப்பதாகவும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி அவரது 35-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இந்த நிலையில், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: நானும் தோனியும் நெருங்கிய நண்பர்கள் இல்லை: யுவராஜ் சிங்!
இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலி ஒரு மிகச் சிறந்த வீரர். அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடக் கூடியவர். அதிலும் குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் அவர் மிகச் சிறப்பாக விளையாடக் கூடியவர். ஒருநாள் போட்டிகளில் அவர் ஆட்டத்தை எடுத்துச் செல்லும் விதம் மற்றும் ஆட்டத்தினை முடிக்கும் விதம் தனித்துவமானது. அவரது சாதனைகள் அவர் தலைமுறை வீரர்களுக்கு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த உந்துசக்தியாக இருக்கும் என்றார்.

சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி நடப்பு உலகக் கோப்பையிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

