ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பிறந்தநாளில் சதம் விளாசி சச்சின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்தார்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:17 am

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்தார்.

உலகக் கோப்பையில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். ஒருநாள் போட்டிகளில் இது அவருடைய 49-வது சதமாகும். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்கள் விளாசி முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணியின் முன்னாள் வீரர் டெண்டுல்கரின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். சிறப்பாக விளையாடிய விராட் கோலி 119 பந்துகளில் சதம் விளாசினார். அதில் 10 பவுண்டரிகள் அடங்கும். 

சச்சின் டெண்டுல்கர் 452 போட்டிகளில் இந்த சாதனையை படைத்திருந்த நிலையில், தற்போது விராட் கோலி 277 போட்டிகளில் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

Story image

சச்சின் டெண்டுல்கரின் இந்த சாதனையை விராட் கோலி அவரது 35-வது பிறந்தநாளான இன்று (நவம்பர் 5) சமன் செய்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.