சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

இதுதான் எனது திருப்திகரமான ஒருநாள் போட்டி: ஆடம் ஸாம்பா

இங்கிலாந்துக்கு  எதிரான நேற்றைய ஒருநாள் போட்டியே ஆஸ்திரேலியாவுக்காக நான் விளையாடிய மிகவும் திருப்திகரமான ஒருநாள் போட்டி என ஆஸ்திரேலிய அணியின் ஆடம் ஸாம்பா தெரிவித்துள்ளார். 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:17 am

DIN

இங்கிலாந்துக்கு  எதிரான நேற்றைய ஒருநாள் போட்டியே ஆஸ்திரேலியாவுக்காக நான் விளையாடிய மிகவும் திருப்திகரமான ஒருநாள் போட்டி என ஆஸ்திரேலிய அணியின் ஆடம் ஸாம்பா தெரிவித்துள்ளார். 

உலகக் கோப்பையில் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளரான ஆடம் ஸாம்பா பேட்டிங், பௌலிங் மற்றும்  ஃபீல்டிங் என அனைத்துத் துறைகளிலுமே சிறப்பாக செயல்பட்டார். அவர் 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும். சிறப்பாக பந்துவீசிய அவர் 10 ஓவர்களில் வெறும் 21 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஃபீல்டிங்கின்போது இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லேயின் கேட்ச்சினைப் பிடித்து அசத்தினார். 

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு  எதிரான நேற்றைய ஒருநாள் போட்டியே ஆஸ்திரேலியாவுக்காக நான் விளையாடிய மிகவும் திருப்திகரமான ஒருநாள் போட்டி என ஆடம் ஸாம்பா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக  அவர் பேசியதாவது: நேர்மையாக கூறவேண்டுமென்றால் இங்கிலாந்துக்கு எதிரான நேற்றையப் போட்டி ஆஸ்திரேலிய அணிக்காக நான் விளையாடிய மிகவும் திருப்திகரமான ஒருநாள் போட்டி என்று நான் கூறுவேன். நான் பேட் செய்த விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது. பேட்டிங்கில் எனது பங்களிப்பை அளித்தது மிகவும்  மகிழ்ச்சியளித்தது. நான் உலகின் மிகச் சிறந்த ஃபீல்டர்களில் ஒருவராக அறியப்பட்ட நபர் கிடையாது. ஆனால், நேற்று நான் ஃபீல்டிங் செய்த விதம் எனக்கு திருப்தியளித்தது என்றார்.

நேற்றைப் போட்டியில் ஆடம் ஸாம்பாவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.