கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

மஞ்சள் நிற ஜெர்ஸியில் வந்து விடாதீர்கள்: சிஎஸ்கே ரசிகர்களுக்கு தினேஷ் கார்த்திக் வேண்டுகோள்!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அக்.8ஆம் நாள் சென்னையில் நடைபெற உள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 7:15 pm

DIN

மொத்தம் 10 அணிகள் 48 ஆட்டங்களில் ஆடுகின்றன. கடந்த 2011-இல் மும்பையில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் கடைசியாக இந்தியா பட்டம் வென்றிருந்தது.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அக்.8ஆம் நாள் சென்னையில் நடைபெற உள்ளது.

சென்னை ரசிகர்கள் சிஎஸ்கே அணிக்கு தீவிரமான ரசிகர்கள். இந்தியாவில் எங்கு போட்டி நடந்தாலும் சென்று விடுவார்கள். 2023 கோப்பையை தோனி தலைமையில் சிஎஸ்கே வென்றது.

இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தினேஷ் கார்த்திக், “சிஎஸ்கே அணியும் மஞ்சள் ஜெர்ஸிதான். ஆஸ்திரேலியா அணியும் மஞ்சள் ஜெர்ஸிதான். அதனால் சென்னையில் நடக்கவுள்ள இந்தியா- ஆஸி. ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கு மஞ்சள் ஜெர்ஸியுடன் வந்து விடாதீர்கள். நம்ம நீல நிற ஜெர்ஸியுடன் வாருங்கள்” என ஜாலியாக கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.