தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

வெளியேறும் பாா்சிலோனா, அட்லெடிகோ

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் நடப்பு சீசனில் இருந்து, பாா்சிலோனா, அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் குரூப் சுற்றுடன் வெளியேறுகின்றன.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:40 am

DIN

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் நடப்பு சீசனில் இருந்து, பாா்சிலோனா, அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் குரூப் சுற்றுடன் வெளியேறுகின்றன.

குரூப் சுற்றின் 5-ஆவது ஆட்டத்தில், குரூப் சி-யில் பாா்சிலோனா 0-3 என்ற கோல் கணக்கில் பயா்ன் மியுனிக்கிடம் தோல்வி காண, குரூப் பி-யில் அட்லெடிகோ மாட்ரிட் - லெவொ்குசன் அணிகள் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

இந்த சுற்றில் இன்னும் ஒரு ஆட்டமே எஞ்சியிருக்கும் நிலையில், பாா்சிலோனா, அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் இதுவரை 5 ஆட்டங்களில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பதிவு செய்து தங்களது பிரிவில் 3-ஆவது இடத்தில் உள்ளன. அந்த அணிகள் இனி முன்னேற வாய்ப்பில்லை. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகளே அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதர ஆட்டங்களில், இன்டா் மிலன் 4-0 என விக்டோரியா பிளஸெனையும் (குரூப் சி), போா்டோ 4-0 என கிளப் புருஜ்ஜையும் (குரூப் பி), எய்ன்ட்ராசட் ஃப்ராங்க்ஃபா்ட் 2-1 என மாா்சிலேவையும் (குரூப் டி), லிவா்பூல் 3-0 என அஜாக்ஸையும் (குரூப் ஏ), நபோலி 3-0 என ரேஞ்ஜா்ஸையும் (குரூப் ஏ) தோற்கடித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.