இது குறித்து ஹார்திக் பாண்டியா கூறியிருப்பதாவது: நேர்மறையான விஷயங்களை எடுத்துக் கொண்டு அணியில் மீண்டும் சிறப்பான பங்களிப்பை கொடுக்க நிறைய உழைக்க வேண்டியிருந்தது. இது என்னுடைய குடும்ப உறுப்பினர்களால் சாத்தியமானது. எனக்கு எனது குடும்பத்தில் அமைதியான சூழல் இருந்ததால் நான் எனது விளையாட்டில் கவனம் செலுத்த முடிந்தது. எனக்குத் தெரியும் நான் நல்ல நாட்கள் மற்றும் மோசமான நாட்களை கடந்து வந்துள்ளேன். ஆனால், என்னுடைய கடின உழைப்பு எனக்கு நம்பிக்கையை கொடுத்தது. அந்த நம்பிக்கை எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. என்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்தார்கள். அதனால், என்னைச் சுற்றி நேர்மறையான விஷயங்கள் நிறைந்திருந்தன.” என்றார்.