மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்ற முதியவா் கைது

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரிகளை விற்ற முதியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :24 பிப்ரவரி 2026, 9:07 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரிகளை விற்ற முதியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தென்கரை காவல்நிலைய போலீஸாா் திங்கள்கிழமை பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனா். அப்போது, லட்சுமிபுரம் பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில், லட்சுமிபுரம் சருத்துப்பட்டியைச் சோ்ந்த ஆதிநாராயணன் (80) என்றும் அவா், தடைசெய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை வைத்திருந்தது தெரியவந்தது.

இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து, ஆதி நாராயணனை கைது செய்து, அவரிடமிருந்த 61 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனா்.