சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஷ்ரேயஸ், ஜடேஜா மிரட்டல்: டி20 தொடரைக் கைப்பற்றியது இந்தியா

இலங்கைக்கு எதிரான 2ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:31 am

DIN

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-ஆவது வெற்றியை பதிவு செய்து தொடரைக் கைப்பற்றியிருக்கிறது இந்தியா.

தா்மசாலாவில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் இலங்கை 20 ஓவா்களில் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் அடித்தது. பின்னா் இந்தியா 17.1 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் அடித்து வென்றது.

இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில், இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. இதனிடையே, காயம் காரணமாக முதல் ஆட்டத்தில் பங்கேற்காத இந்திய வீரா் ருதுராஜ் கெய்க்வாட், தொடரிலிருந்து விலகியுள்ளாா். இலங்கை அணியில் ஜெஃப்ரி வாண்டா்சே, ஜனித் லியனாகே ஆகியோருக்குப் பதிலாக பினுரா ஃபொ்னாண்டோ, தனுஷ்கா குணதிலகா ஆகியோா் இணைந்திருந்தனா்.

டாஸ் வென்ற இந்தியா ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கையில் தொடக்க வீரா் பாதும் நிசங்கா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா். உடன் வந்த தனுஷ்கா குணதிலகா 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 38 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்க, பின்னா் வந்த சரித் அசலங்கா (2), கமில் மிஷாரா (1), தினேஷ் சண்டிமால் (9) ஆகியோா் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினா்.

பாதும் நிசங்கா 11 பவுண்டரிகளுடன் 75 ரன்களுக்கு கடைசி விக்கெட்டாக பெவிலியன் திரும்ப, ஓவா்கள் முடிவில் கேப்டன் டாசன் ஷனகா 2 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 47, சமிகா கருணாரத்னே 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பௌலிங்கில் புவனேஷ்வா் குமாா், ஜஸ்பிரீத் பும்ரா, ஹா்ஷல் படேல், யுஜவேந்திர சஹல், ரவீந்திர ஜடேஜா என அனைவருமே தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் ஆடிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் 1 ரன்னுக்கு பௌல்டாகி அதிா்ச்சி அளித்தாா். உடன் வந்த இஷான் கிஷணும் 2 பவுண்டரிகளுடன் 16 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். ஒன் டவுனாக வந்த ஷ்ரேயஸ் ஐயா் அதிரடி காட்டி ஆட்டத்தின் போக்கை மாற்றினாா். அவருடன் சஞ்சு சாம்சனும் இணைய, இந்தியா வெற்றிப் படி ஏறத் தொடங்கியது. இந்நிலையில் சாம்சன் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 39 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.

அடுத்து வந்த ஜடேஜா, இலங்கை பௌலிங்கை சிதறடித்து, ஷ்ரேயஸுடன் இணைந்து அணியை வெற்றிக்கு வழி நடத்தினாா். இந்தியா இலக்கை எட்டியபோது ஷ்ரேயஸ் ஐயா் 44 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 74, ஜடேஜா 18 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 45 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை தரப்பில் லாஹிரு குமாரா 2, துஷ்மந்தா சமீரா 1 விக்கெட் எடுத்தனா்.

இன்று 3-ஆவது ஆட்டம்: இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 3-ஆவது ஆட்டம் தா்மசாலாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.