கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் தொடர்கள்: அட்டவணை வெளியீடு

2021-ல் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சர்வதேசப் போட்டிகளின் அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:22 pm

DIN

2015-க்குப் பிறகு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது நியூசிலாந்து அணி.

2021-ல் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சர்வதேசப் போட்டிகளின் அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகின்றன. 

2015-ல் நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. 1-1 என அந்தத் தொடர் சமன் ஆனது. அதன்பிறகு இந்த வருடம் ஜூன் மாதம் இங்கிலாந்தில் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து பங்கேற்கிறது.

இலங்கை அணி இங்கிலாந்தில் ஜூன் - ஜூலை மாதங்களில் தலா 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள், டி20 தொடர்களிலும் பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் ஜூலை மாதம் தலா 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள், டி20 தொடர்களிலும் பங்கேற்கின்றன. 

ஆகஸ்ட் - செப்டம்பரில் இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. நாட்டிங்கம்-மில் ஆகஸ்ட் 4 அன்று தொடங்கும் டெஸ்ட் தொடர், செப்டம்பர் 14-ல் மான்செஸ்டரில் நிறைவடைகிறது.

இங்கிலாந்தில் 2020-ல் நடைபெற்ற சர்வதேச ஆட்டங்கள் அனைத்திலும் ரசிகர்கள் மைதானங்களில் அனுமதிக்கப்படவில்லை. எனினும் இந்த வருடம் நடைபெறவுள்ள கிரிக்கெட் ஆட்டங்களில் ரசிகர்கள் அனுமதிக்கப்படவுள்ளார்கள்.

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்

முதல் டெஸ்ட், ஆகஸ்ட் 4-8: நாட்டிங்கம்
2-வது டெஸ்ட், ஆகஸ்ட் 12-16: லார்ட்ஸ்
3-வது டெஸ்ட், ஆகஸ்ட் 25-29: லீட்ஸ்
4-வது டெஸ்ட்: செப்டம்பர் 2-6: தி ஓவல்
5-வது டெஸ்ட்: செப்டம்பர் 10-14: மான்செஸ்டர் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.