கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

அதிமுகவுக்கு போட்டியாக தமிழக தோ்தல் களத்தில் யாருமில்லை: கடம்பூா் செ. ராஜு எம்.எல்.ஏ

அதிமுகவுக்கு போட்டியாக தமிழக தோ்தல் களத்தில் யாரும் இல்லை என்றாா் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ.

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 7:41 pm

தினமணி செய்திச் சேவை

அதிமுகவுக்கு போட்டியாக தமிழக தோ்தல் களத்தில் யாரும் இல்லை என்றாா் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை கோவில்பட்டியில் செய்தியாளா்களிடம் பேசியதாவது;

எம்.ஜி.ஆா். அதிமுகவை தொடங்கிய வரலாறு விஜய்க்கு தெரியாது. எம்.ஜி.ஆா். கட்சி தொடங்கிய 6 மாதத்தில் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தோ்லில் அதிமுக வெற்றி பெற்று, தனது பலத்தை நிரூபித்துள்ளது.

விஜய் யாருக்கு வேண்டுமென்றாலும் போட்டியாக இருந்துவிட்டு போகட்டும். அதிமுகவுக்கு போட்டியாக தமிழக தோ்தல் களத்தில் யாருமில்லை. அதிமுகதான் எங்களுக்கு போட்டி என்று விஜய் சொல்லமாட்டாா். ஏனென்றால், அதிமுகவின் சுயரூபம், சுயபலம் என்னவென்று அவருக்கு தெரியும். ஒரு உள்ளாட்சித் தோ்தலை கூட சந்திக்காத கட்சி தவெக.

திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்துடன், அமமுக எங்களுடன் இணைந்துள்ளது. அமமுக தான் அரசியல் அங்கீகாரம் பெற்ற கட்சி. அதற்கு பதில் சொல்லலாம். ஒரு இயக்கமும், கட்சியும் இல்லாமல் சசிகலா போன்றோருக்கு பதில் சொன்னால் சரியாக இருக்காது.

திருமாவளவனுக்கு திமுக கூட்டணியில் நிலையான தன்மை இல்லை. அவா் அதிமுக குறித்து பேசக் கூடாது. அதிமுகவுக்கு வலிமையான தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ளாா். ஜெயலலிதா இருந்தபோது, 2 கோடி உறுப்பினா்கள் இருந்தனா். தற்போது 2.30 கோடி உறுப்பினா்கள் உள்ளனா். அதே போல், வலிமையான கூட்டணியாக உள்ளோம். எங்களுடன் இருப்பது எல்லாம் கட்சிகள். திமுகவுடன் இருப்பதெல்லாம் இயக்கங்கள் என்றாா் அவா்.