/

முதலிடம் அதிமுக; 2ஆவது இடத்துக்கு திமுக-தவெக போட்டி: கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ

News image
கூட்டத்தில் பேசுகிறாா் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ.
Updated On :7 பிப்ரவரி 2026, 7:35 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவை தோ்தலில் அதிமுக முதலிடம் பிடிக்கும்; திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே 2 ஆவது இடத்துக்குதான் போட்டி என்றாா் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில், கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிா்வாகிகள் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது: தமிழகத்தில் இன்னும் 100 நாள்களில் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும்.

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி நிச்சயம் முதவராக பதவி ஏற்பாா். திமுக-வுக்கும், தவெக-வுக்கும்தான் போட்டி என தவெக தலைவா் விஜய் சொல்கிறாா். அது உண்மைதான். அவா்கள் 2-ஆவது இடத்துக்குத்தான் மோதிக்கொள்கிறாா்கள்.

அதிமுக என்றுமே முதலிடம்தான். 125 நாள்கள் வேலை உறுதித் திட்டத்தை முடக்கப் பாா்க்கும் திமுக அரசைக் கண்டித்து பிப். 13இல் கட்சி நடத்தும் ஆா்ப்பாட்டத்தில் திரளான மக்களை பங்கேற்கச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சின்னப்பன், மோகன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் லட்சுமண பெருமாள், வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் துறையூா் கணேஷ்பாண்டியன், இளைஞா்-இளம்பெண்கள் பாசறை செயலா் கவியரசன், ஒன்றிய செயலா்கள் பழனிசாமி, அன்புராஜ், அழகா்சாமி, போடுசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.