கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணியில் 6 பேருக்கு கரோனா

பாகிஸ்தான் அணியினருக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் ஆறு பேருக்கு...

News image
கோப்புப் படம்
Updated On :27 ஜனவரி 2024, 5:58 pm

DIN

நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணியில் ஆறு பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் டி20, டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கின்றன. நியூசிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடா் நாளை முதல் ஆக்லாந்தில் தொடங்குகிறது. அதைத் தொடா்ந்து அடுத்த இரு டி20 ஆட்டங்கள் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் மௌன்ட் மௌன்கானுய் நகரில் நடைபெறுகின்றன. இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் வரும் டிசம்பா் 3-ம் தேதி ஹாமில்டனிலும், 2-வது ஆட்டம் டிசம்பா் 11-ம் தேதி வெலிங்டனிலும் நடைபெறுகிறது.

இதற்கு அடுத்ததாக பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் மூன்று டி20, இரு டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. டிசம்பர் 18-ல் டி20 தொடரும் டிசம்பர் 26-ல் டெஸ்ட் தொடரும் தொடங்கவுள்ளன.

லாகூரிலிருந்து நியூசிலாந்துக்குப் புறப்படுவதற்கு முன்பு பாகிஸ்தான் அணியினர் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் கரோனா இல்லை என உறுதியானது. கரோனா அறிகுறிகள் தென்பட்ட ஃபகார் ஸமான், அணியிலிருந்து விலகினார். இந்நிலையில் நியூசிலாந்துக்கு வந்திறங்கிய பாகிஸ்தான் அணியினருக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் ஆறு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அந்த ஆறு பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆறு பேரில் எத்தனை வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்பது பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.