தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பிரபல கிரிக்கெட் வீரருக்கு கரோனா அறிகுறி!

பிஎஸ்எல் டி20 போட்டியில் விளையாடிய பிரபல கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸுக்கு கரோனா தொற்று அறிகுறி காணப்பட்டதாக...

News image
Updated On :17 மார்ச் 2020, 11:16 am

பிஎஸ்எல் டி20 போட்டியில் விளையாடிய பிரபல கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸுக்கு கரோனா தொற்று அறிகுறி காணப்பட்டதாக முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா கூறியுள்ளார். 

இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், பாகிஸ்தானில் நடைபெற்ற பிஎஸ்எல் டி20 போட்டியில் கராச்சி கிங்ஸ் அணியில் இடம்பெற்றார். 7 ஆட்டங்களில் விளையாடி 239 ரன்கள் எடுத்தார். 

இந்நிலையில் அலெக்ஸ் ஹேல்ஸுக்கு கரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதால் உடனே பிஎஸ்எல் டி20 போட்டியிலிருந்து விலகி, இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றார். இதன் காரணமாக பிஎஸ்எல் போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் உடனடியாக ஒத்திவைக்கப்பட்டன. 

இந்நிலையில் பிஎஸ்எல் போட்டி ஒத்திவைக்கப்பட்ட பிறகு பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா அளித்த பேட்டியில், அலெக்ஸ் ஹேல்ஸிடம் கரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டன. அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன என்றார். இதன் காரணமாக பிஎஸ்எல் போட்டியில் விளையாடிய வீரர்களுக்கும் தொலைக்காட்சி ஒளிபரப்புப் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனைகள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து திரும்பிய அலெக்ஸ் ஹேல்ஸ், சுயமாக வீட்டுக்குள் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.