புது தில்லி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மித்தாலி ராஜ் புடவை அணிந்து கிரிக்கெட் விளையாடும் விடியோ ஒன்று, இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மித்தாலி ராஜ். இவர் உலகிலேயே அதிக அளவு ஒரு நாள் போட்டிகளில் ஆடிய வீராங்கனை உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் படைத்துள்ளவர். கடந்த வருடம் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்காகத் தயாராக்கி வருகிறார்.
இந்நிலையில் வியாழனன்று வெளியான மித்தாலி ராஜ் புடவை அணிந்து கிரிக்கெட் விளையாடும் விடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த விடியோவில் மித்தாலி இந்தியாவின் பாரம்பரிய உடையான சேலையை அணிந்து கொண்டு, கிரிக்கெட் உபகரணங்களுடன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அத்துடன் தற்போது நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இறுதிப்போட்டியில் விளையாட உள்ள இந்திய அணிக்கு வாழ்த்து சொல்லலும் விதமான வாசகங்களும் இடம்பெற்றுள்ளது. மகளிர் தினத்தினை முன்னிட்டு இந்த விடியோ வெளியிடப்பட்டு வைரலாகப் பரவி வருகிறது.
பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் செய்தியுடன் மித்தாலி அதனை தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சூடம்மாள் அம்மன் சிலை மீது சூரிய ஒளி படும் அபூர்வ காட்சி

ஹீட் ஸ்ட்ரோக் - அறிகுறிகள் என்ன? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

விரைவில் நிறைவடைகிறது டெல்னா டேவிஸின் ஆடுகளம் தொடர்!

தேர்தலுக்குப் பிறகும் மேற்கு வங்கத்தில் மத்திய படைகள் : அமித் ஷா
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


