பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஓய்வு எப்போது?: ரோஜர் ஃபெடரர் பதில்!

இந்தப் போட்டியில் விளையாடிய விதம் மகிழ்வளிக்கிறது.

News image
Updated On :31 ஜனவரி 2020, 5:28 am

மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் ரோஜர் ஃபெடரரை நேர் செட்களில் வீழ்த்தியுள்ளார் ஜோகோவிச். சிறப்பாக விளையாடி அரையிறுதிச்சுற்றை 7-6 (1), 6-4, 6-3 என நேர் செட்களில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். காயம் காரணமாக ஃபெடரர் அவதிப்பட்டதால் அவரால் முழு ஈடுபாட்டுடன் விளையாட முடியாமல் போனது. 

ஆட்டம் முடிந்த பிறகு ஃபெடரர் பேட்டியளித்ததாவது:

காயம் காரணமாக வெற்றி பெறமுடியாது என நினைத்திருந்தால் விளையாடச் சென்றிருக்க மாட்டேன். இந்தப் போட்டியில் விளையாடிய விதம் மகிழ்வளிக்கிறது. என்னால் இன்னும் சிறப்பாக விளையாட முடியும் என எண்ணுகிறேன். இதற்கு முன்பு சமீபமாக எந்தப் போட்டியிலும் விளையாடாததால் அரையிறுதி வரை முன்னேறியது நல்ல முடிவு.

ஓய்வு குறித்துக் கேட்கிறீர்கள். வருங்காலத்தில் என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாது. அதிலும் என் வயதில் வாய்ப்பே இல்லை. நான் நம்பிக்கையுடன் உள்ளேன். என் உடற்தகுதி குறித்து திருப்திகரமாக உள்ளேன். இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை. குடும்பச் சூழல் உள்பட இந்த வருடம் எப்படிச் செல்கிறது என்று பார்க்கலாம். பிறகு அதிலிருந்து முடிவெடுக்கலாம். நான் மீண்டும் இங்கு விளையாட வருவேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.