இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 ஆட்டம் ஹேமில்டனில் நேற்று நடைபெற்றது. ஆக்லாந்தில் நடைபெற்ற இரு டி20 ஆட்டங்களையும் வென்று 2-0 என டி20 தொடரில் இந்திய அணி முன்னிலை வகித்ததால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் நியூஸிலாந்து அணிக்கு இருந்தது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 65 ரன்கள் எடுத்தார். பிறகு விளையாடிய நியூஸிலாந்து அணியும் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சமன் ஆனது. பிறகு நடைபெற்ற சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி 17 ரன்கள் எடுத்தது. செளதி வீசிய சூப்பர் ஓவரில், கடைசி இரு பந்துகளில் 10 ரன்கள் தேவை என்கிற நிலையில் இரு சிக்ஸர்கள் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார் ரோஹித் சர்மா. இதனால் ஆட்ட நாயகன் விருது அவருக்குக் கிடைத்தது.
இந்நிலையில் நேற்றைய டி20 ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிறகு சூப்பர் ஓவரில் 11 ரன்கள் எடுத்தார். இதனால் அவர் நேற்று சதமடித்ததாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா?
ரோஹித் சர்மா நேற்று முதலில் 65 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு சூப்பர் ஓவரில் 15 ரன்கள் எடுத்தார். 65 ரன்கள் எடுத்தபோது 3 சிக்ஸர்களும் சூப்பர் ஓவரில் 2 சிக்ஸர்களும் எடுத்தார். இவையெல்லாம் ரோஹித் சர்மாவின் கணக்கில் சேருமா?
பும்ரா நேற்று மோசமாகப் பந்துவீசி, 4 ஓவரில் 45 ரன்கள் கொடுத்தார். பிறகு சூப்பர் ஓவரில் ஒரு ஓவரில் 17 ரன்கள் கொடுத்தார். இதுவும் பும்ராவின் கணக்கில் சேருமா?
மூன்றுக்கும் பதில் - இல்லை.
சூப்பர் ஓவர் என்பது ஆட்டத்தின் முடிவுக்கான ஒரு நடைமுறை மட்டுமே. மற்றபடி சூப்பர் ஓவரில் எடுக்கப்படும் ரன்களும் விக்கெட்டுகளும் சிக்ஸர்களும் வீரர்களின் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. அதாவது, நேற்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா 65 ரன்கள் எடுத்ததும் வில்லியம்சன் 95 ரன்கள் எடுத்ததும்தான் பதிவாகும். இதர ரன்களும் பந்துவீச்சாளர்கள் எடுத்த விக்கெட்டுகளும் கொடுத்த ரன்களும் கணக்கில் சேராது. எனவே வீரர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் அணியின் வெற்றிக்காக மட்டுமே. தனிநபர் கணக்குகளில் அவற்றுக்கு இடமில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி

ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு தற்கொலைத் தாக்குதல் மிரட்டல்

நந்தா கலை, அறிவியல் கல்லூரிக்கு மத்திய அரசு ரூ.70 லட்சம் ஊக்க நிதி

கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு ரூ.5.7 கோடி கல்வி ஊக்கத்தொகை
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


