2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தோனிக்கு ஐபிஎல் சரியாக அமையாவிட்டால் விலகிவிடுவார்: ரவி சாஸ்திரி

ஐபிஎல் போட்டியில் விளையாட ஆர்வமாக இருந்தால் அவர் அதற்குத் தயாராக இருப்பார்...

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:36 pm

எழில்

மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு முடிவை அறிவிப்பாரா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. வரும் ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறியிருந்தாா். இந்நிலையில் 2019-20 ஆண்டுக்கான 27 வீரா்கள் பெயா்கள் கொண்ட ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் தோனியின் பெயா் நீக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியில் நன்றாக விளையாடிய பிறகு இந்திய அணிக்குத் தோனி தேர்வாக வாய்ப்புண்டா என்கிற கேள்வி ரசிகர்களிடம் உள்ளது. ஒரு பேட்டியில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது:

ஐபிஎல் போட்டி வருகிறது. அதற்குப் பிறகு நீங்கள் பாருங்கள். எல்லோருக்கும் தெரியப் போகிறது. தேர்வுக்குழுவினருக்குத் தெரியும். முக்கியமாக தோனிக்கும் இது தெரியும். எதையும் தோனி திணிக்கமாட்டார். அவரைப் பற்றி உங்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும். 

எதையும் நேரடியாகச் சொல்லக்கூடியவர். டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலகியதும் அப்படித்தான். 100 டெஸ்டுகள் விளையாட வேண்டும் என்று தனக்குத் தானே அழுத்தம் தந்துகொள்ள மாட்டார். அவர் பயிற்சியைத் தொடங்கி விட்டாரா எனத் தெரியாது. ஐபிஎல் போட்டியில் விளையாட ஆர்வமாக இருந்தால் அவர் அதற்குத் தயாராக இருப்பார். ஐபிஎல் போட்டியில் விளையாட ஆரம்பிப்பார். தனக்கு ஐபிஎல் போட்டி சரியாக அமையவில்லையென்றால் நன்றி கூறி விடைபெற்று விடுவார் என்று பேட்டியளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.