பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

டெஸ்ட் தொடருக்கு முன்பு, நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிராக இரு முறை டக் அவுட் ஆன மயங்க் அகர்வால்!

இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால், நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிராக இருமுறை டக் அவுட் ஆகியுள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2020, 9:13 am

இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால், நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிராக இருமுறை டக் அவுட் ஆகியுள்ளார். 

இந்தியா ஏ -நியூஸிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற நான்கு நாள் டெஸ்ட் ஆட்டம், கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது.

இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து விளையாடிய நியூஸிலாந்து ஏ அணி, 2-ம் நாளின் முடிவில் 114 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் எடுத்தது.

3-ம் நாளில், 160.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 562 ரன்கள் எடுத்து நியூஸிலாந்து ஏ அணி டிக்ளேர் செய்தது. விக்கெட் கீப்பர் கிளவர் 196 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சாப்மேன் 114 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து விளையாடிய இந்திய ஏ அணியில் தொடக்க வீரர் மயங்க் அகர்வால், இந்தமுறையும் டக் அவுட் ஆகி வெளியேறினார். நியூஸி. ஏ அணிக்கு எதிரான இரு இன்னிங்ஸ்களிலும் டக் அவுட் ஆனது இந்திய நிர்வாகத்தைக் கவலை கொள்ள வைத்துள்ளது.

3-ம் நாளின் முடிவில், இந்திய ஏ அணி, 37 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்துள்ளது. ப்ரியங் பஞ்சல் 67, ஷுப்மன் கில் 33 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி 219 ரன்கள் பின்தங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.