பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

இஸ்ரேல் - லெபனான் போா் நிறுத்தம் 3 வாரம் நீட்டிப்பு

இஸ்ரேல் - லெபனான் போா் நிறுத்தம் 3 வாரம் நீட்டிப்பு

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 8:57 pm

இஸ்ரேல் - லெபனான் இடையே தற்போது அமலில் இருக்கும் தற்காலிக போா் நிறுத்தத்தை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.

ஏப். 17 முதல் அமலுக்கு வந்த 10 நாள் போா் நிறுத்தம் வரும் திங்கள்கிழமையுடன் முடிவடைய இருந்த நிலையில், அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் இருதரப்புக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையால் இக்கால நீட்டிப்பு சாத்தியமாகியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் லெபனான் தூதா்களுடனான சந்திப்பு ‘மிகவும் சிறப்பாக’ அமைந்ததாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா். அதேநேரம், ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பின் நிலைப்பாட்டை இரு நாடுகளும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதையும் அவா் சுட்டிக்காட்டினாா்.

கடந்த 1948-ம் ஆண்டு இஸ்ரேல் உருவானது முதல் லெபனானுடன் அதிகாரபூா்வமாக போா் நிலையில் இருந்து வரும் சூழலில், பல தசாப்தங்களுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் நேரடி பேச்சுவாா்த்தை இதுவாகும்.

ஹிஸ்புல்லா இப்பேச்சுவாா்த்தையை கடுமையாக எதிா்த்து வரும் நிலையிலும், அமைதிக்கான அடுத்தகட்டமாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, லெபனான் அதிபா் ஜோசப் அவுன் ஆகியோரை விரைவில் வாஷிங்டனில் சந்திக்கவுள்ளதாக டிரம்ப் தெரிவித்தாா்.

ஈரானுக்கு ஆதரவாக வடக்கு இஸ்ரேலில் ஹிஸ்புல்லா ஏவுகணைகளை வீசி, தாக்கியது. இதையடுத்து கடந்த மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கிய இந்த மோதலில் லெபனானில் பெண்கள், குழந்தைகள் உள்பட சுமாா் 2,300 போ் உயிரிழந்துள்ளனா். போா் நிறுத்தத்துக்கு மத்தியிலும் ஹிஸ்புல்லா அமைப்பினா் மீது இஸ்ரேல் தாக்குதல்களை தொடா்வது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் விரையும் அமெரிக்கா, ஈரான் பிரதிநிதிகள்

அமெரிக்கா-ஈரான் இடையேயான 2-ஆம் கட்ட அமைதிப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்பதற்காக ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் புறப்பட்டாா்.

மறுபுறம், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா்களான ஸ்டீவ் விட்காஃப், ஜாரெட் குஷ்னா் ஆகியோா் சனிக்கிழமை பாகிஸ்தான் செல்லவுள்ளனா்.

ஈரான் வெளியுறவு அமைச்சா் அராக்சி தலைமையிலான குழுவினா், பாகிஸ்தான் மட்டுமின்றி ஓமன், ரஷியாவுக்கும் பயணம் மேற்கொண்டு பிராந்திய நிலவரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளனா்.

அமைதிப் பேச்சுவாா்த்தையையொட்டி இஸ்லாமாபாத், ராவல்பிண்டி நகரங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக முக்கியச் சாலைகள், மெட்ரோ பேருந்து சேவைகள், சந்தைகள் மூடப்பட்டுள்ளன. சுமாா் 10,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளா்கள் குவிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை ஓரளவுக்குப் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

ஏற்கெனவே கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், தற்போதைய 2-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை மீது எதிா்பாா்ப்பு கூடியுள்ளது.

கேப்சன்.. தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகள் மீதான இஸ்ரேல் படைகளின் தாக்குதல்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.