டி20: பாகிஸ்தானுக்கு எதிராக 173 ரன்கள் எடுத்த நியூசிலாந்து
பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்துள்ளது.


பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் இரு ஆட்டங்களை வென்று டி20 தொடரைக் கைப்பற்றியுள்ள நியூசிலாந்து அணி, நேபியரில் நடைபெற்று வரும் 3-வது டி20 ஆட்டத்தில் முதலில் விளையாடியது. தொடக்க வீரர்கள் கப்தில் 19 ரன்களும் விக்கெட் கீப்பர் டிம் சைஃபர்ட், 20 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 35 ரன்களும் எடுத்தார்கள். கான்வே, 45 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தானின் ஃபஹீம் அஷ்ரப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டி20 தொடருக்கு அடுத்ததாக இரு அணிகளும் இரு டெஸ்டுகளில் விளையாடவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...