மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி சாதனை வெற்றியை அடைந்த சிங்கப்பூர் கிரிக்கெட் அணி!

சர்வதேச கிரிக்கெட்டில் முழு உறுப்பினராக உள்ள ஓர் அணியை முதல் முதலாக வீழ்த்திய சாதனையை அடைந்துள்ளது சிங்கப்பூர் கிரிக்கெட் அணி. 

News image

படம் - ICC/TWITTER

Updated On :30 செப்டம்பர் 2019, 5:38 am

சர்வதேச கிரிக்கெட்டில் முழு உறுப்பினராக உள்ள ஓர் அணியை முதல் முதலாக வீழ்த்திய சாதனையை அடைந்துள்ளது சிங்கப்பூர் கிரிக்கெட் அணி. 

சிங்கப்பூரில் சிங்கப்பூர் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 ஆட்டம் நடைபெற்றது. முதலில் விளையாடிய சிங்கப்பூர் அணி, 18 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. அந்த அணியில் ஒருவர் கூட அரை சதம் எடுக்காத போதிலும் ரோஹன் (39 ரன்கள்), டேவிட் (41 ரன்கள்), மண்ப்ரீத் சிங் (41 ரன்கள்) ஆகியோர் பொறுப்புடன் விளையாடி, விரைவாக ரன்கள் சேர்த்து பெரிய ஸ்கோரை எட்ட உதவினார்கள்.

கடினமான இலக்கை எதிர்கொண்ட ஜிம்பாப்வே அணி, 18 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. கேப்டன் வில்லியம்ஸ் 66 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் ஜிம்பாப்வே வெற்றி பெற 10 ரன்கள் தேவைப்பட்டபோது அந்த அணியால் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் 5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.