நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

தெ.ஆ. அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோற்றால்...?: இந்திய அணி எதிர்கொள்ளவிருக்கும் அபாயம்!

முதலிடத்தைத் தக்கவைக்கவேண்டுமென்றால் டெஸ்ட் தொடரை வென்றே ஆகவேண்டும், அல்லது டிராவாவது...

News image
Updated On :26 செப்டம்பர் 2019, 5:29 am

ஐசிசி தரவரிசையில் 115 ரேட்டிங்குகளுடன் முதலிடத்தில் உள்ளது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. 108 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் தென் ஆப்பிரிக்கா உள்ளது.

இரு அணிகளும் அக்டோபர் 2 முதல் தொடங்கவுள்ள 3 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளன. 

இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோற்றால் பெரிய அபாயம் ஒன்று காத்திருக்கிறது.

டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தால் இந்திய அணி தொடர்ந்து ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் தான் இருக்கும். பிரச்னையில்லை.

ஆனால் 0-1 என்கிற அளவில் டெஸ்ட் தொடரில் தோற்றாலும் முதலிடத்தை இழந்துவிடும் இந்திய அணி. அதேபோல 0-2, 0-3 என்றாலும் முதலிடம் இந்திய அணியின் வசம் இருக்காது. பதிலாக, டெஸ்ட் தொடரை வெல்லும் தென் ஆப்பிரிக்க அணி, ஐசிசி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துவிடும். தொடரில் தோற்ற இந்திய அணி 2-ம் இடத்துக்கு இறங்கிவிடும். இப்படியொரு அபாயத்துடன் தான் டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி.

எனவே முதலிடத்தைத் தக்கவைக்கவேண்டுமென்றால் டெஸ்ட் தொடரை வென்றே ஆகவேண்டும், அல்லது டிராவாவது செய்யவேண்டும் என்கிற நெருக்கடி இந்திய அணிக்குத் தற்போது ஏற்பட்டுள்ளது. 

சவாலை வென்று காண்பிப்பாரா விராட் கோலி?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.