தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விலகியுள்ளார். இதையடுத்து அவருக்குப் பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐசிசி சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. 2 ஆண்டுகள் நடைபெறும் இப்போட்டியில் 9 நாடுகள் பங்கேற்று 72 ஆட்டங்களில் மோதுகின்றன. இந்தியா ஏற்கெனவே 2-0 என மே.இ.தீவுகளை வென்று 120 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர், அக்டோபர் 2 அன்று விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில் காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 2018 முதல் உமேஷ் யாதவ் 5 டெஸ்டுகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இதனால் அவர் மீண்டும் இந்திய அணியில் தனக்கான இடத்தைத் தக்கவைக்க இது நல்ல வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.
இந்திய டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, புஜாரா, ரஹானே, விஹாரி, ரிஷப் பந்த், சஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, இஷாந்த் சர்மா, ஷுப்மன் கில், உமேஷ் யாதவ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே 2-ல் தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!
நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம் கையெழுத்து! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!

மஹிந்திரா ஹாலிடேஸ்: 4வது காலாண்டு லாபம் 43% சரிவு!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய வங்கதேசம்!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


