தமிழ்நாடு மாநில கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) அதன் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்து உத்தரவிட்டது. எனினும், தேர்தல் முடிவுகளின் அறிவிப்பு, நீதிமன்றத்தின் முடிவுக்கு உள்பட்டது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து டிஎன்சிஏ அமைப்புக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. பிசிசிஐயின் முன்னாள் தலைவரும் புகழ்பெற்ற கிரிக்கெட் நிர்வாகியுமான என். சீனிவாசனின் மகள் ரூபா சீனிவாசன் டிஎன்சிஏ-வின் தலைவராகத் தேர்வாகலாம் என்று அறியப்படுகிறது. டிஎன்சிஏ தலைவராக ரூபா தேர்வு செய்யப்பட்டால், டிஎன்சிஏ அமைப்பின் முதல் பெண் தலைவர் என்கிற பெருமையை அவர் அடைவார்.
திங்களன்று நடைபெறவுள்ள டிஎன்சிஏ கூட்டத்தில் ரூபாவின் பெயர் பரிந்துரைக்கப்படும் எனத் தெரிகிறது. பிறகு, செவ்வாய் அன்று ரூபா தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூபா, சூதாட்டப் புகாரில் சிக்கிய சிஎஸ்கே அணியின் முன்னாள் தலைமை நிர்வாகி குருநாத் மெய்யப்பனின் மனைவி. அவர் இதுவரை கிரிக்கெட் தொடர்பான நிர்வாகப் பணிகள் ஈடுபட்டதில்லை. எனினும் என். சீனிவாசனின் இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளதால் அவருடைய நிர்வாகத் திறமைகளும் கிரிக்கெட் தொடர்புகளும் டிஎன்சிஏ தலைவர் பதவிக்கு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
டிஎன்சிஏ-வின் செயலாளர் பதவிக்கு முன்னாள் வீரரும் புகழ்பெற்ற வர்ணனையாளருமான லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் சாண்ட்னருக்கு மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸில் இணைந்த கேசவ் மகாராஜ்!

உன்னை நம்பி பாடல் வெளியானது!

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
அரசியல் பகடைக் காய்களா குழந்தைகள்? விஜய் மீது புகார்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


