மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

என்னைத் தேர்வு செய்யாதது ஏன்?: கேள்வி எழுப்பும் வேகப்பந்து வீச்சாளர்!

26 வயது பரிந்தர் ஸ்ரண், இந்திய அணிக்காக 6 ஒருநாள் ஆட்டங்களிலும் 2 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். 

News image
Updated On :21 செப்டம்பர் 2019, 10:12 am

26 வயது பரிந்தர் ஸ்ரண், இந்திய அணிக்காக 6 ஒருநாள் ஆட்டங்களிலும் 2 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். 

இந்நிலையில் இந்த வருடம் விஜய் ஹசாரே போட்டியில் பஞ்சாப் அணிக்காக அல்லாமல் சண்டிகர் அணிக்காக விளையாடவுள்ளதாக ஸ்ரண் அறிவித்துள்ளார். பஞ்சாப் அணியில் இடம் கிடைக்காத நிலையில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். 

என்னைத் தேர்வு செய்யாததற்குத் தேர்வுக்குழுவினர் எந்தக் காரணமும் சொல்லவில்லை. நான் இந்திய அணிக்காக மீண்டும் விளையாட ஆசைப்படுகிறேன். அதற்கு முதலில் நான் விளையாடவேண்டும். எனவே தான் அணி மாறியுள்ளேன். என்னை பஞ்சாப் அணிக்குத் தேர்வு செய்யாதது ஏன் என்கிற காரணத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். ஆனால் தேர்வுக்குழுவினர் என்னுடைய தொலைப்பேசி அழைப்புகளைத் தவிர்த்துவிட்டார்கள். என்னால் முழு வருடத்தையும் வீணடிக்க முடியாது என்று ஒரு பேட்டியில் ஸ்ரண் கூறியுள்ளார். 

கடந்த வருடம் பஞ்சாப் அணிக்காக விளையாடிய பரிந்தர் ஸ்ரண், விஜய் ஹசாரே போட்டியில் 3 ஆட்டங்களில் 3 விக்கெட்டுகளும் இரண்டு ரஞ்சி ஆட்டங்களில் 2 விக்கெட்டுகளும் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் விளையாடிய 5 ஆட்டங்களில் 3 விக்கெட்டுகளும் எடுத்தார். எதிர்பார்த்தபடி அதிக விக்கெட்டுகள் எடுக்காததால் இந்த வருடம் பஞ்சாப் அணியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் அணி மாறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.