இந்திய-தென்னாப்பிரிக்க ஏ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற இரண்டாவது டெஸ்ட் டிராவில் முடிவடைந்துள்ளது.
மைசூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய ஏ அணி, முதல் இன்னிங்ஸில் 417 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஷுப்மன் கில் 92, கருண் நாயர் 78, சஹா 60, ஷிவம் டுபே 68, ஜலஜ் சக்ஸேனா 48 ரன்கள் எடுத்தார்கள். தெ.ஆ. ஏ தரப்பில் முல்டர், பீடிட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இதையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி, 109.3 ஓவர்கள் வரை விளையாடி 400 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரரும் கேப்டனுமான மார்க்ரம் 161 ரன்களும் முல்டர் 130 ரன்களும் எடுத்தார்கள். இந்திய ஏ அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும் நதீம் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
3-ம் நாளின் முடிவில் இந்திய ஏ அணி 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்தது. பஞ்சால் 9, அபிமன்யூ ஈஸ்வரன் 5 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
கடைசி நாளான இன்று, அபிமன்யூ ஈஸ்வரன் 32 ரன்களிலும் ஷுப்மன் கில் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு ஜோடி சேர்ந்த பஞ்சாலும் கருண் நாயரும் பொறுப்புடன் விளையாடினார்கள். சதமடித்த பஞ்சால், 109 ரன்களில் ஆட்டமிழந்தார். கருண் நாயர் 51 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய ஏ அணி தனது 2-வது இன்னிங்ஸில், 70 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து ஆட்டம் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்க ஏ அணி கேப்டன் மார்க்ரம் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
முதல் டெஸ்டை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய ஏ அணி, 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என வென்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் சாண்ட்னருக்கு மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸில் இணைந்த கேசவ் மகாராஜ்!

உன்னை நம்பி பாடல் வெளியானது!

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
அரசியல் பகடைக் காய்களா குழந்தைகள்? விஜய் மீது புகார்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


