2020 ஐபிஎல் போட்டியிலும் விராட் கோலியே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐபிஎல் போட்டியிலும் கேப்டனாக நீடிப்பார் என ஆர்சிபி அணியின் இயக்குநர் மைக் ஹெஸ்ஸன் கூறியுள்ளார்.
ஐந்து முறை பிளே ஆஃப்புக்குத் தகுதி பெற்றும் மூன்று முறை இறுதிச்சுற்றில் விளையாடியும் பிரபல வீரர்களைக் கொண்டிருந்தும் பெங்களூர் அணியால் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை இதுவரை வெல்லமுடியவில்லை. கடந்த வருடம் 6-ம் இடம், 2017-லிலும் இந்த வருடமும் கடைசி இடம் எனக் கடந்த மூன்று வருடங்களாக மிக மோசமாகவே விளையாடி வருகிறது. இதையடுத்து, அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளார்கள். அதற்குப் பதிலாக தலைமைப் பயிற்சியாளராக சைமன் கடிச்சும் அணி இயக்குநராக மைக் ஹெஸ்ஸனும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கு முன்பு சைமன் கடிச், கொல்கத்தா அணியின் உதவிப் பயிற்சியாளராகவும் ஹெஸ்ஸன், பஞ்சாப் அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்கள்.
இநிந்லையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், மைக் ஹெஸ்ஸன் கூறியதாவது: கடந்த சில வாரங்களாக நடைபெற்ற கூட்டங்களின் அடிப்படையில் சொல்கிறேன், விராட் கோலியின் தலைமைப்பண்பு குறித்து எங்களுக்கு எவ்விதச் சந்தேகமும் இல்லை. கேள்விக்கே இடமில்லை, அவர் தான் ஆர்சிபி அணியின் கேப்டன். எங்கள் அனுபவத்தின் மூலம் கிடைக்கும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்வதில் அவருக்கும் எவ்விதத் தடையும் இல்லை. விராட் கோலியே எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறார் என எண்ணவில்லை. தன்னுடைய முந்தைய அனுபவங்களின் மூலம் தவறுகளைத் திருத்திக்கொள்வார். விஜய் ஹசாரே, முஸ்டாக் அலி கோப்பை ஆகிய போட்டிகளின் மூலம் எங்கள் அணிக்கான புதிய வீரர்களைத் தேர்வு செய்வோம் என்று கூறியுள்ளார்.
தலைமைப் பயிற்சியாளர் சைமன் கடிச்சும் விராட் கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.
ஆர்சிபி கேப்டனாக விராட் கோலி
ஆட்டங்கள் - 110
வெற்றி - 49
தோல்வி - 55
வெற்றி சதவிகிதம் - 47.16
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் சாண்ட்னருக்கு மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸில் இணைந்த கேசவ் மகாராஜ்!

உன்னை நம்பி பாடல் வெளியானது!

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
அரசியல் பகடைக் காய்களா குழந்தைகள்? விஜய் மீது புகார்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


