உலக மல்யுத்த போட்டியில் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற இந்தியாவின் ரவி குமார், பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.
கஜகஸ்தானின் நுர்-சுல்தான் நகரில் உலக மல்யுத்த போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டி 2020 ஒலிம்பிக் போட்டி தகுதிச் சுற்றாகவும் உள்ளது.
இன்று நடைபெற்ற ஆடவர் 65 கிலோ பிரிவு காலிறுதிச்சுற்றில் நட்சத்திர வீரர் பஜ்ரங் புனியா வட கொரியாவின் ஜாங் சொனை எதிர்கொண்டார். ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய உலகின் நெ.1 வீரர் பஜ்ரங் புனியா 8-1 என்கிற புள்ளிக்கணக்கில் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றார். இதன்மூலம் 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு அவர் தகுதி பெற்றார்.
அரையிறுதிச் சுற்றில் கஸகஸ்தானைச் சேர்ந்த தவுலத் நியாஸ்பெகோவை எதிர்கொண்டார் பஜ்ரங் புனியா. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 9-9 என இருவரும் சமமாகப் புள்ளிகள் பெற்றாலும் விதிகளின் அடிப்படையில் தவுலத் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார். இதனால் பஜ்ரங் புனியா ஏமாற்றமடைய நேர்ந்தது.
ஆடவர் 57 கிலோ பிரிவில் இந்தியாவின் ரவி குமார் தாஹியாவும் ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். இன்று நடைபெற்ற காலிறுதிச் சுற்றில் உலக சாம்பியன் யுகி டகாஹஸியை 6-1 என்கிற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார் ரவி குமார். ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்ற அவர், அரையிறுதிச் சுற்றில் ரஷ்யாவின் உகேவை எதிர்கொண்டார். அதில், 4-6 எனத் தோற்று இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.
நேற்று நடைபெற்ற போட்டியில், இந்திய நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகட் வெண்கலம் வென்று, 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் சாண்ட்னருக்கு மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸில் இணைந்த கேசவ் மகாராஜ்!

உன்னை நம்பி பாடல் வெளியானது!

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
அரசியல் பகடைக் காய்களா குழந்தைகள்? விஜய் மீது புகார்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


