ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் பேட்டிங் பிரிவில், விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் டக் அவுட் ஆனார் கோலி. இது அவருக்குப் பின்னடைவைத் தந்துவிட்டது. ஆஷஸ் தொடரில் 3-வது டெஸ்டில் விளையாடாதபோதும் ஆஸி.யின் ஸ்டீவ் ஸ்மித், கோலியைப் பின்னுக்குத் தள்ளி பேட்டிங் தரவரிசையில் 904 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஒரே ஒரு புள்ளி குறைவாகப் பெற்ற கோலி 2-ம் இடத்தில் உள்ளார். ரஹானே 11-வது இடத்திலிருந்து முன்னேறி 7-ம் இடம் பிடித்துள்ளார்.
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சுத் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா 3-ம் இடத்துக்கு உயர்ந்துள்ளார். 2-வது டெஸ்டில் அற்புதமாகப் பந்துவீசியதால் இந்த இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அணிகளின் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
ஐசிசி தரவரிசை: பேட்டிங்
1. ஸ்மித்
2. விராட் கோலி
3. கேன் வில்லியம்சன்
4. புஜாரா
5. ஹென்றி நிகோல்ஸ்
ஐசிசி தரவரிசை: பந்துவீச்சு
1. கம்மின்ஸ்
2. ரபாடா
3. பும்ரா
4. ஹோல்டர்
5. ஜேம்ஸ் ஆண்டர்சன்
ஐசிசி தரவரிசை: அணிகள்
1. இந்தியா
2. நியூஸிலாந்து
3. தென் ஆப்பிரிக்கா
4. இங்கிலாந்து
5. ஆஸ்திரேலியா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: தோ்தலுக்குப் பிறகும் 60 நாள்களுக்கு மத்திய படை பாதுகாப்பு - அமித் ஷா உறுதி
மேற்கு வங்கத்தில் கையெறி குண்டுகள் கண்டுபிடிப்பு: என்ஐஏ வழக்குப்பதிவு

ஏரியில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மேற்கு வங்க எஸ்ஐஆரின்போது பெயா் நீக்கம்: தீா்ப்பாயம் முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


