பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

டி20 உலகக் கோப்பையில் பங்கு பெறும் அணிகள்: முழுப் பட்டியல்

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் 16 அணிகளின் பட்டியல் இறுதி வடிவம் பெற்றுள்ளது...

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:35 am

எழில்

அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை டி20 உலகக் கோப்பை நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான தகுதிச்சுற்றில் விளையாடி ஆறு அணிகள் டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளன. இதன்மூலம் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் 16 அணிகளின் பட்டியல் இறுதி வடிவம் பெற்றுள்ளது.

டி20 உலகக் கோப்பையில் 16 அணிகள் பங்கேற்கின்றன. டி20 தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுவிட்ட நிலையில் மீதமுள்ள ஆறு இடங்களுக்கான தகுதிச்சுற்றுப் போட்டி துபை மற்றும் அபு தாபியில் தற்போது நடைபெற்று வருகிறது. தகுதிச்சுற்றுப் போட்டியில் 14 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. லீக் சுற்றுகளின் முடிவுகளில் இரு பிரிவுகளிலும் முதலிடம் வகிக்கும் அணிகள் டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெறும். அதன் அடிப்படையில் குரூப் ஏ பிரிவில் பப்புவா நியூ கினி அணி விளையாடிய 6 ஆட்டங்களில் 5-ல் வென்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. அதேபோல அயர்லாந்து அணி, குரூப் பி பிரிவில் 6 ஆட்டங்களில் 4-ல் வென்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. இதன் அடிப்படையில் பப்புவா நியூ கினி, அயர்லாந்து ஆகிய இரு அணிகளும் டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றன. 

இதன்பிறகு, நெதர்லாந்து, நமிபியா ஆகிய இரு அணிகளும் டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றன. பிளே ஆஃப் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெதர்லாந்து. 2014, 2016 உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற்ற நெதர்லாந்து அணி, 3-வது முறையாக டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளது. மற்றொரு ஆட்டத்தில் ஓமன் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நமிபியா. இதன்மூலம் முதல்முறையாக டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு நமிபியா அணி தகுதி பெற்றுள்ளது. அந்த அணி இதற்கு முன்பு 2003-ல் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற்றது. 

இதையடுத்து, கடைசி இரு இடங்களை நிர்ணயிக்கும் ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. ஸ்காட்லாந்து - ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஸ்காட்லாந்து அணி, டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது. அந்த அணி 4-வது முறையாக டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதன்பிறகு, ஹாங்காங் - ஓமன் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் ஓமன் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது. 

இதன்மூலம், அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் அணிகளின் பட்டியல் இறுதி வடிவம் பெற்றுள்ளது. 16 அணிகளின் பட்டியல்:

1. பாகிஸ்தான்
2. இங்கிலாந்து
3. தென் ஆப்பிரிக்கா
4. ஆஸ்திரேலியா
5. இந்தியா
6. நியூஸிலாந்து
7. இலங்கை
8. ஆப்கானிஸ்தான்
9. வங்கதேசம்
10. மேற்கிந்தியத் தீவுகள்
11. பப்புவா நியூ கினி
12. அயர்லாந்து
13. நெதர்லாந்து
14. நமிபியா
15. ஸ்காட்லாந்து
16. ஓமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.