ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் மத்திய பிரதேச அணிக்கு எதிராக தமிழக அணி 50 ஓவர்களில் 360 ரன்கள் குவித்துள்ளது.
டாஸ் வென்ற மத்தியப் பிரதேச அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அபினவ் முகுந்த சிறப்பாக விளையாடி 139 பந்துகளில் 147 ரன்கள் எடுத்தார். விஜய் சங்கர் 93 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து பெரிய ஸ்கோர் எடுக்க உதவினார். ஆனால் இவ்விருவரின் பங்களிப்புக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக அதிரடியாக விளையாடி தமிழக அணியின் ஸ்கோரை 360-க்கு உயர்த்தினார் தினேஷ் கார்த்திக். 28 பந்துகளில் 3 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்து அவர் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தமிழக அணி, 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் எடுத்துள்ளது.
குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி இதற்கு முன்பு விளையாடிய 7 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போர் நிறுத்தம்! அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!
மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷா

ஒடிசாவில் வெப்பத் தாக்குதலுக்கு இரு ஆசிரியர்கள் பலி!

தஞ்சை பெரியகோயில் தேரோட்டம்! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


