போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை ஈரான் அரசு வழங்கியுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்த இடைக்கால ஒப்பந்தம் இன்றுடன் நிறைவடைகிறது. கடந்த வாரம் பாகிஸ்தானில் இரு நாடுகளுக்கும் இடையே இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.
ஈரான் நாட்டைச் சேர்ந்த குழுவினர் இஸ்லாமாபாத்துக்கு சென்றிருந்த நிலையில், அமெரிக்க குழுவினர் பயணத்தை ரத்து செய்ததால், பாகிஸ்தான் மத்தியஸ்த குழுவிடம் புதிய முன்மொழிவை ஈரான் வழங்கியுள்ளது.
அந்த முன்மொழிவு தொடர்பான செய்தியை அமெரிக்காவின் ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவிடம் வழங்கிய புதிய முன்மொழிவில், மூன்று நிலைகளை ஈரான் குறிப்பிட்டுள்ளது. முதலில் போர் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும், ஈரான் மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இரண்டாவது கட்டமாக அமெரிக்க படைகள் பின்வாங்கப்பட்டு, ஹோர்முஸ் நீரிணைத் திறக்கப்பட்டு, கடல்வழிப் போக்குவரத்து சீர்செய்யப்படும்.
இது இரண்டும் நடந்தால், இறுதியாக அணு ஆயுத உற்பத்தி நிறுத்தம் குறித்து அமெரிக்க குழுவிடம் ஈரான் விவாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுத உற்பத்தியை முழுமையாக நிறுத்துவோம் என்று ஈரான் அறிவித்தால் மட்டுமே போர் நிறுத்தம் செய்யப்படும் என்று அமெரிக்கா மீண்டும் மீண்டும் தெரிவித்து வரும் சூழலில், ஈரானின் புதிய முன்மொழிவை அமெரிக்கா ஏற்குமா எனத் தெரியவில்லை.
Summary
Ceasefire! Iran Submits New Proposal to the US!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரான் போர்: மக்கானா ஏற்றுமதி பாதிப்பு! ஒரு மாதத்தில் ரூ.500 கோடி இழப்பு!
அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!

போர் நிறுத்தம்! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!
கச்சா எண்ணெய் விலை 15% சரிவு! டிரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி!!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை



