நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

அதிவேக 350 விக்கெட்டுகள்: முரளிதரன் சாதனையை சமன் செய்த அஸ்வின்!

டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 350 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் சாதனைப் படைத்தார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:18 am

Raghavendran

டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 350 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் சாதனைப் படைத்தார்.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் புதிய சாதனைப் படைத்தார்.

முதல் டெஸ்டின் 5-ஆம் நாள் ஆட்டத்தின் போது டி பிரையுன் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 350 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கையின் ஜாம்பவான் சுழற்பந்துவீச்சாளர் முரளிதரனின் சாதனையை அஸ்வின் சமன் செய்தார். 

டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட்டுகளை வீழ்த்த இருவருக்கும் 66 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே தேவைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.