ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டி ஆடவா் ஒற்றையா் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வியடைந்துள்ளார்.
சீனாவின் ஹாங்காங் நகரில் இன்று நடைபெற்ற பாட்மிண்டன் சூப்பா் சீரிஸ் 500 போட்டியின் அரையிறுதிச் சுற்றில் ஹாங்காங்கின் லீ சியுக் யி-யை எதிர்கொண்டார் ஸ்ரீகாந்த். முதல் கேமை 21-9 என ஹாங்காங் வீரர் எளிதாக வெற்றி கண்டார். எனினும் அடுத்த கேமில் ஆரம்பம் முதல் முன்னிலை பெற்று கடும் சவாலை அளித்தார் ஸ்ரீகாந்த். அவர், 18-14 என்கிற நிலையில் முன்னிலை இருந்தபோதும் லீ சியுக் அருமையாக விளையாடி 20-20 என்கிற நிலைக்குக் கொண்டு வந்தார். கடைசியில் 23-25 என 2-வது கேமில் தோற்று அரையிறுதியிலும் தோல்வியடைந்தார் ஸ்ரீகாந்த்.
இதன்மூலம் அரையிறுதிச் சுற்றில் 21-9, 25-23 என ஸ்ரீகாந்த்தை வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார் ஹாங்காங்கைச் சேர்ந்த லீ சியுக் யி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

வெள்ளிச்சுடரே பாடல்!

அதிக ரன்கள் குவித்து சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

அழகு ஓவியம் தேஜு அஸ்வினி - புகைப்படங்கள்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


