பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

முதல் டெஸ்ட்: இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் அபாரம்!

முதல் நாள் உணவு இடைவேளையின்போது வங்கதேச அணி, 26 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :14 நவம்பர் 2019, 6:15 am

3 டி20 ஆட்டங்கள், 2 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாட வங்கதேச அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. டி20 தொடரை ரோஹித் சா்மா தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இந்தியா, வங்கதேச அணிகள் இடையிலான முதல் டெஸ்ட், மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் இன்று தொடங்கியுள்ளது. 

டாஸ் வென்ற வங்கதேச அணியின் புதிய கேப்டன் மொமிநுல் ஹக் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் நதீமுக்குப் பதிலாக இஷாந்த் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி ஆரம்பம் முதல் சிறப்பாகப் பந்துவீசியதால் ரன் எடுக்க வங்கதேச பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். தொடக்க வீரர்கள் இம்ருல் கைஸும் இஸ்லாமும் தலா 6 ரன்கள் சேர்த்து முறையே உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா பந்துவீச்சுகளில் ஆட்டமிழந்தார்கள்.

கவனமாக 36 பந்துகள் வரை எதிர்கொண்டு 12 ரன்கள் எடுத்த முகமது மிதுன் 12 ரன்களில் ஷமி பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 24-வது ஓவரில் முஷ்ஃபிகுர் ரஹிம் அளித்த கேட்சை நழுவவிட்டார் விராட் கோலி. 

இந்தூரில் முதல் நாளன்று வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும். நான் டாஸ் வென்றிருந்தால் பந்துவீச்சைத் தான் தேர்வு செய்திருப்பேன் என கோலி சொன்னது போலவே முதல் நாள் ஆட்டத்தின் முதல் பகுதி, வேகப்பந்துவீச்சுக்கு ஏற்றவாறு இருந்துள்ளது. சுழற்பந்துவீச்சாளர்களை விடவும் வேகப்பந்துவீச்சாளர்களே அதிக ஓவர்களை வீசியிருக்கிறார்கள். 

முதல் நாள் உணவு இடைவேளையின்போது வங்கதேச அணி, 26 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்துள்ளது. ரஹிம் 14, ஹக் 22 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.