உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 52 ரன்கள் எடுத்தார் கெதர் ஜாதவ். அதற்குப் பிறகு அவர் 5 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியும் பெரிதாக எதுவும் ரன்கள் எடுக்க முடியவில்லை. விஜய் ஹசாரே போட்டியிலும் ஒரு அரை சதமும் எடுக்கவில்லை. இதனால் ரசிகர்கள் அவரைக் கிட்டத்தட்ட மறந்தே போன நிலையில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளார்.
ராஞ்சியில் நடைபெற்று வரும் இந்தியா பி - இந்தியா சி அணிகளுக்கு இடையிலான தியோதர் கோப்பை இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா பி அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் - கெதர் ஜாதவ். மூன்று முன்வரிசை பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாத நிலையில் நிதிஷ் ராணாவுடன் இணைந்து அருமையாகக் கூட்டணியை அமைத்தார் கெதர் ஜாதவ். ஒரு கட்டத்தில் 25-வது ஓவர்களின்போது 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது இந்தியா பி அணி. ஆனால் ஆட்டத்தின் போக்கைத் தன்னுடைய அருமையான ஆட்டத்தின் மூலம் மாற்றினார் கெதர் ஜாதவ். 94 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் எடுத்தார். இளம் வீரர் ஜெயிஸ்வால் 79 பந்துகளில் 54 ரன்களும் விஜய் சங்கர் 33 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்கள். கடைசிக்கட்டத்தில் களமிறங்கிய கெளதம் 10 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார்.
இந்தியா பி அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா சி அணித் தரப்பில் 21 வயது இஷான் போரெல் அற்புதமாகப் பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏலகிரியில் கூடுதலாக அரசு தங்கும் விடுதி: சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை!

காஞ்சனகிரி மலை சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்படுமா? பொதுமக்கள் எதிா்பாா்ப்பு!!
டாஸ்மாக் மதுபாட்டில்கள் கடத்தியவா் கைது

நாம் தமிழா் கட்சிக் கொடி அவமதிப்பு: கடலூா் எஸ்.பி.யிடம் புகாா்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


