தியோதர் கோப்பைக்கான கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா பி - இந்தியா சி அணிகள் இன்று விளையாடி வருகின்றன.
ராஞ்சியில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா சி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இரு பேட்ஸ்மேன்கள் தவிர மற்ற மேல்வரிசை, நடுவரிசை வீரர்களால் அதிக ரன்கள் எடுக்க முடியவில்லை. விராட் சிங் 76 ரன்கள் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 32-வது ஓவரில் தினேஷ் கார்த்திக் 34 ரன்களில் ஆட்டமிழந்தபோது இந்தியா சி அணி 5 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்துத் தடுமாற்றத்துடன் இருந்தது. அதன்பிறகு களமிறங்கிய ஆல்ரவுண்டர் அக்ஷர் படேல் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். சிக்ஸர்களும் பவுண்டரிகளும் அடித்துத் தன்னுடைய அணிக்குக் கெளரவமான ஸ்கோரைப் பெற்றுத் தந்தார். 61 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 98 ரன்கள் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இன்னிங்ஸின் கடைசிப் பந்தில் 3 ரன்கள் எடுத்தால் சதமெடுக்கலாம் என்கிற நிலையில் அவரால் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்தியா சி அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரானுடன் அமைதி பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டா்கள்! - அதிபர் டிரம்ப் அறிவிப்பு

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


