டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பரம வைரிகள் இன்று மோதல்: முதல் வெற்றியை பெறுமா இங்கிலாந்து?

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:20 am

Raghavendran

2019 உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் பரம வைரிகளாக இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இரு அணிகளுமே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய இந்தப் போட்டி மிக முக்கியமானதாகும். எனவே இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நடப்பு தொடரில் பலம் வாய்ந்த அணியாக விளங்கி வரும் இங்கிலாந்து, தனது சொந்த மண்ணில் விளையாடி வருவது கூடுதல் பலமாக அமைந்துள்ளது. இருப்பினும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாத இலங்கையிடம் தோற்றது இங்கிலாந்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. 

மறுபுறம் ஆஸ்திரேலிய வீரர்களும் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், வங்கதேசத்துடனான போட்டி அவர்களுக்கும் கடும் சவாலாக அமைந்தது.

போட்டியை நடத்தும் இங்கிலாந்து 6 ஆட்டங்களில் 4 வெற்றிகளைப் பெற்றது. பாகிஸ்தானுடனும், இலங்கையுடனும் தோல்வியுற்று பட்டியலில் 8 புள்ளிகளுடன் 4-ஆம் இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் நடப்பு சாம்பியன் ஆஸி. 6 ஆட்டஙகளில் 5 வெற்றி, 1 தோல்வியுடன் 10 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தில் உள்ளது.

கடந்த 1992 உலகக் கோப்பையில் இருந்து தற்போது வரையிலான உலகக் கோப்பை ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து அணி வீழ்த்தியதில்லை. எனவே அதனை இம்முறை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் ஆஸ்திரேலியாவுடனான கடந்த 10 ஒருநாள் போட்டிகளில் 9-ல் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.